பூஜையுடன் தொடங்கிய நான் சிகப்பு மனிதன் - படங்கள்

சனி, 30 நவம்பர் 2013 (12:07 IST)
ஒரு வெற்றி திரையுலகில் வேறு பல முதலீட்டிற்கு எப்படி வழியமைக்கிறது என்பதற்கு விஷால் சரியான உதாரணம். விஷால் தயாரித்த பாண்டிய நாடு ஓரளவு கௌரவமான வெற்றியை பெற்றது.
FILE

படம் தோற்றிருந்தால் என்ன ஆகியிருக்கும், தெரியாது. ஆனால் ஜெயித்ததால் அடுத்தப் படத்தை யுடிவி-யுடன் இணைந்து சொந்த தயாரிப்பில் தொடங்கியிருக்கிறார். படம் நான் சிகப்பு மனிதன்.

ரஜினி, பாக்யராஜ் நடித்த ப்ளாக்பஸ்டர் படத்தின் அதே பெயர். இந்தப் பெயரை வைத்து காதல் மாதிரி படமா எடுப்பார்கள். ஆக்ஷன் த்ரில்லர்தான். நேற்று சென்னை விஜிபி பக்கமிருக்கும் பங்களாவில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கினார்கள். யுடிவி தனஞ்செயன், காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர், விக்ராந்த் என பலரும் கலந்து கொண்டனர்.

நான் சிகப்பு மனிதனை திரு இயக்குகிறார். இரண்டு தோல்விகளுக்குப் பிறகும் விஷாலின் நம்பிக்கையை பெற்றிருப்பதே ஒரு சாதனைதான். லட்சுமிமேனன், இனியா என்று இரண்டு பேர் நடிக்கிறார்கள். ஆனால் பூஜையில் இனியாவை பார்க்க முடியவில்லை. புலிவாலில் பிஸியாக இருக்கலாம்.
FILE

ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கிறார்.
FILE

மேலும் படங்கள்...


FILE


FILE

FILE


FILE

FILE


FILE

வெப்துனியாவைப் படிக்கவும்