மீண்டும் அரசியல் சுழலில் ரஜினி

வியாழன், 6 அக்டோபர் 2011 (14:55 IST)
தேர்தல் வரும் போது ரஜினியின் பெயர் அடிபடும். உள்ளாட்சி தேர்தலும் இதற்கு விதிவிலக்கல்ல. சென்னையில் அதற்கான முதல் அறிகுறி தெரிந்திருக்கிறது.

சென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் சைதை துரைசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கட்சி தாண்டி அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் பெற்றவர். இவருக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் மன்றத்தின் சென்னை நிர்வாகி சைதை ரவி ஆதரவு திரட்டி வருகிறார்.

ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலேயே இவர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர். இதற்காக தலைமை மன்றத்திடம் அனுமதியும் பெற்றுள்ளனர்.

விரைவில் சைதை துரைசாமி ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்