ரா ஒன் - ர‌ஜினிக்கு ம‌ரியாதை

புதன், 14 செப்டம்பர் 2011 (16:41 IST)
ஷாருக்கானின் சூப்பர் ஹீரோ படமான ரா ஒன் விரைவில் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் போஸ்டர்கள், காட்சிகள் எந்திரன் படத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளன. இந்த‌ச் சாயலை தவிர்ப்பதற்காக ஷாருக் ரொம்பவே மெனெக்கெட்டிருக்கிறார்.

எந்திரன் படத்தின் தொழில்நுட்பத்தை ரா ஒன் விஞ்சுமா என்பதுதான் அனைவ‌ரின் எதிர்பார்ப்பும். ஆனால் இந்த விளையாட்டில் கலந்துகொள்ள ஷாருக் தயாராக இல்லை.

எந்திரனுக்கு போட்டியாக ரா ஒன் படத்தை எடுக்கவில்லை என்றிருப்பவர், ர‌ஜினிக்கு ம‌ரியாதை செய்யும் விதமாக ஒரு காட்சியை படத்தில் வைத்திருப்பதாக ரகசியம் வெளியிட்டிருக்கிறார்.

போட்டியை விட சமாதானமே மேல் என்று நினைத்திருப்பாரோ?

வெப்துனியாவைப் படிக்கவும்