நண்பன் லேட்டஸ்ட் தகவல்

வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (12:09 IST)
தனது வழக்கத்துக்கு மாறாக அதி வேகத்தில் நண்பன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஷங்கர். விஜய், ‌‌‌‌‌ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் இந்தப் படத்தின் டாக்கி போர்ஷன் முழுவதும் முடிந்துவிட்டன.

இனி பாக்கி இருப்பவை ஒரு பாடல் காட்சியும், இன்னொரு பாடல் காட்சியின் சிறு பகுதியும் மட்டுமே. இவையும் முடிந்தால் போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள். இந்த வருடமே படம் திரைக்கு வரும் என்பதை இந்த தகவல்கள் உறுதி செய்கின்றன.

பாடல் காட்சிகளை செப்டம்பர் முதல் வாரத்தில் எடுக்கயிருப்பதாக ஷங்கர் தெ‌ரிவித்துள்ளார். அதாவது இந்த வாரம். பத்து தினங்களில் பாடல்களை எடுத்து முடிப்பதாக திட்டம்.

ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜநண்பனுக்கு இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்