அஞ்சலியின் தீர்மானம்

வியாழன், 23 ஜூன் 2011 (16:05 IST)
ஸ்விம் சூட்... இந்த வார்த்தை சிலருக்கு தேன், பலருக்கு தேள். ஸ்விம்சூட்டில் நடிப்பீர்களா என்றுதான் முதலில் கேட்கிறார்கள். அப்புறம்தான் கதை. முதல் கேள்விக்கு ஆம் என்று பதில் சொன்னால் சம்பளத்தில் பல லட்சம் கூடுதலாகவும் கிடைக்கும்.

அஞ்சலிக்கு அந்த கூடுதல் சம்பளம் தேவையில்லையாம். வரப்போகிற கருங்காலி படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார் அஞ்சலி. கிளாமர் இல்லாமல் நிலைக்க மட்டுமல்ல நடிக்கவும் முடியாது என்ற சூழலில்தான் திரையுலகம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்கிறவர், கண்டிப்பாக ஸ்விம்சூட்டில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று கறாராக கூறுகிறார். அப்படி நடிப்பதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று நெட்டி முறிக்கிறார்.

காலம் கல்லை மட்டுமல்ல அஞ்சலியின் மனதையும் கரைக்கும் ஆற்றல்மிக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்