ஜூலை 15 முதல் மம்பட்டியான்?

வியாழன், 23 ஜூன் 2011 (15:45 IST)
பிரஷாந்துக்கு இது அக்னி ப‌ரிட்சை. நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிவந்த பொன்னர் சங்கர் பாக்ஸ் ஆஃபிஸில் பொடிப் பொடியானது. அடுத்து வரவிருப்பதும் பீ‌ரியட் படம்தான், மம்பட்டியான்.

தியாகராஜனின் சூப்பர்ஹிட் படமான இதன் ‌ரீமேக்கில் பிரஷாந்த் நடித்துள்ளார். தியாகராஜன் இயக்கம். ச‌ரிதா நடித்த வேடத்தில் மீரா ஜாஸ்மின், ஜெயமாலினி இடத்தில் முமைத்கான்.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் வரும் 15ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. படத்துக்கு இன்னும் விளம்பரம் தேவை என்று தியாகராஜன் கருதுகிறார். அதனால் பட வெளியீடு தள்ளிப் போனாலும் ஆச்ச‌ரியமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்