அருண் விஜய் நடிக்கும் தடையற தாக்க படத்தில் ஒப்பந்தமான பிராச்சி தேசாய் ஓடிப்போனதும், அவர் மீது புகார் தந்திருப்பதும் அறிந்ததே.
மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தில் பிராச்சிக்குப் பதில் வேறொரு மும்பை நடிகையை நடிக்க வைக்க உள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் அவர் யார் என்பது தெரிந்துவிடும்.
அதே நேரம் டெல்லி மாடல் ஒருவரும் இந்தப் படத்தில் நடிக்கிறார். பெயர் ராகுல் ப்ரீத்தி சிங். முழுமையான ஆக்சனில் தயாராகிறது தடையற தாக்க.