சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

வியாழன், 23 ஜூன் 2011 (14:07 IST)
5. எங்கேயும் காதல்
பிரபுதேவாவின் எங்கேயும் காதல் சென்னையில் மட்டும் சுமாரான வசூலை பெற்றுள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 3.5 லட்சங்கள். இதுவரை இப்படம் சென்னையில் 3.61 கோடிகளை வசூல் செய்துள்ளது.

4. வானம்
சிம்புவின் வானம் சென்ற வாரம் 3.55 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இப்படம் 4.5 கோடிகளை வசூல் செய்துள்ளது.

3. கோ
கே.வி.ஆனந்தின் கோ அதன் தகுதிக்கு மீறிய கலெக்சனைப் பெற்று ஆச்ச‌ரியப்படுத்துகிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 8.8 லட்சங்கள். இதுவரை 7.84 கோடிகளை இப்படம் வசூல் செய்துள்ளது.

2. ஆரண்யகாண்டம்
இந்த அற்புதமான படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்காமல் இருப்பது வருத்தமான விஷயம். சென்ற வார இறுதியில் 16.7 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 61 லட்சங்களை வசூல் செய்துள்ளது.

1. அவன் இவன்
பாலாவின் அவன் இவன் எதிர்பார்த்தது போலவே முதல் மூன்று தினங்களில் பட்டையை‌க் கிளப்பியுள்ளது. இதன் மூதல் மூன்று நாள் வசூல் மட்டும் 89 லட்சங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்