ஆந்திராவில் விஷால்

வியாழன், 23 ஜூன் 2011 (13:09 IST)
அவன் இவன் வாடு வீடு என்ற பெய‌ரில் ஆந்திராவில் வெளியாகியிருக்கிறது. படத்துக்கு செம ரெஸ்பான்ஸாம்.

விஷாலின் ‌திமிரு, சண்டக்கோழிப் படங்கள் ஆந்திராவில் பட்டையை கிளப்பின. பாலாவின் சேது, பிதாமகன் படங்களும் அப்படியே. இப்போது இவர்கள் இருவரும் இணைந்திருக்கிறார்கள். கேட்கவா வேண்டும்.

வாடு வீடு ஆடியோ விழாவுக்கு விஷால், பாலா, ஆர்யா எல்லோரும் ஹைதராபாத் சென்றனர். இப்போது விஷால் மட்டும் தனியாகச் சென்றிருக்கிறார். இந்த‌ப் பயணம் படத்தை புரமோட் செய்ய.

வாடு வீடு தெலுங்கு உ‌ரிமையை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா வாங்கியிருக்கிறார். விஷாலின் ஆந்திரப் பயணத்துக்கு இதுதான் முக்கிய காரணம்.

வெப்துனியாவைப் படிக்கவும்