பாலாவுக்கு எதிராக ரத்த கையெழுத்து

புதன், 22 ஜூன் 2011 (20:48 IST)
பாலாவின் அவன் இவன் படத்துக்கு தடை கோ‌ரி சிங்கம்பட்டி ஜமீன்தா‌ரின் தம்பி தாயப்ப ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் 150 பெண்கள் ரத்தத்தில் ையெழுத்திட்டு முதல்வருக்கு மனு அனுப்ப உள்ளனர்.

அவன் இவனில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், காரையார் சொ‌ரிமுத்து கோவிலைப் பற்றியும் சில காட்சிகள் உள்ளன. இது ஜமீனையும், தெய்வத்தையும் கிண்டலடிக்கும் விதமாக உள்ளதாகக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ொ‌ரிமுத்து அய்யனாரைப் பற்றி அவதூறக‌ப் பேசி நடித்த ஆர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோ‌ரி கோவை போலீஸ் கமிஷன‌ரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாலா இதுவரை கருத்து எதுவும் தெ‌ரிவிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்