தீபாவளிக்கு அரவான்

புதன், 22 ஜூன் 2011 (20:08 IST)
ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அ‌ஜீத்தின் மங்காத்தா வெளியாகும் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. அதற்குமுன் விஜய்யின் வேலாயுதம் திரைக்கு வருகிறது. மங்காத்தாவா... வேலாயுதமா... யார் அதிகம் கலெக்சன் செய்யப் போவது என்று இப்போதே ஆர்வமாக உள்ளனர்.

வேலாயுதத்துக்கு போட்டி மங்காத்தா என்றால் நண்பனுக்கு போட்டி அரவான்.

3இடியட்ஸின் ‌ரீமேக்கான நண்பனில் விஜய், ‌ஜீவா, ஸ்ரீகாந்த் என்று மூன்று பேர் நடித்திருக்கிறார்கள். ஷங்கர் இயக்கம். தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். வசந்தபாலனின் அரவான் படத்தையும் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

17ஆம் நூற்றாண்டில் நடைபெறுவதாக அரவான் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலின் சிறு இழையே அரவான் படத்தின் கதை. ஆதி, பசுபதி, தன்ஷிகா நடித்திருக்கும் இந்தப் படத்தில் பரத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்