மல்லுக்கட்டும் ஹனிரோஸ்

புதன், 22 ஜூன் 2011 (16:34 IST)
பெய‌ரில் தேனும் பூவும் இருந்தென்ன... தேளும் முள்ளுமாகதான் இருக்கிறது வாழ்க்கை. விக்ராந்த் படத்தில் அறிமுகமான ஹனிரோஸ் தனது பெயரை சவுந்தர்யா என்று மாற்றி ஒரு படத்தில் நடித்தார். பெயர் மாற்றம் வாழ்க்கையில் மாற்றத்தை தரும் என்ற நம்பிக்கை.

ஹனிரோஸ் பெய‌ரில் நடித்தப் படம் ‌ரிலீஸாகவாவது செய்தது. சவுந்தர்யா பெயர் ராசி... படம் பாதியிலேயே வலிப்பு வந்து நுரை தள்ளிவிட்டது. இதனால் மீண்டும் தேனும் பூவுமாக மாறியிருக்கிறார்.

ஹனிரோஸ் என்ற தனது பழைய பெய‌ரில் இவர் கமிட்டாகியிருக்கும் படம் மல்லுக்கட்டு. காதலுக்காக மல்லுக்கட்டும் ஜோடியை பற்றிய கதை. முருகானந்தம் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இதில் ஹீரோவாக நடிக்கும் வருண், தனுஷின் சொந்தமாம். தம்பிமுறை என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்