இளையராஜாவுக்கு விருது

செவ்வாய், 18 ஜனவரி 2011 (14:30 IST)
இந்திய அளவில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

இயல், இசை, நாட்டியம் என மூன்று துறைகளில் இந்த விருதுகள் முறையே பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் இந்த வருடம் முதல் வழங்கப்படுகின்றன.

இந்த வருடம் பாரதி விருதுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இசைத்துறையில் சாதனை படைத்ததற்காக எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுக்கு இளையராஜதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாலசரசுவதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் பத்மா சுப்பிரமணியம்.

இவர்களுக்கு விருதுடன் தலா ஒரு லட்சம் பொற்கிழியும் வழங்கப்பட உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்