பொங்கலுக்கு வெற்றிமாறன் படம்

திங்கள், 29 நவம்பர் 2010 (14:44 IST)
டிசம்ப‌ரில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ஆடுகளம் பொங்கலுக்குதா‌ன் திரைக்கு வருகிறது. படத்தை வாங்கியிருக்கும் சன் பிக்சர்ஸ் இந்த தள்ளிவைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.

தனுஷ் நடித்திருக்கும் ஆடுகளம் மதுரை பின்னணியை கொண்டது. டாப்ஸி இதில் ஹீரோயின். இவர் ஆங்கிலோ இண்டியனாக இதில் நடித்துள்ளார். ஈழக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை பொல்லாதவன் படத்தை தயா‌ரித்த கதிரேசனே தயா‌ரித்திருந்தார். பிறகு இதன் ஒட்டுமொத்த விநியோக உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியது.

தனுஷின் உத்தமபுத்திரன் தற்போது ஓடிக் கொண்டிருப்பதாலும், கமல், விஜய் படங்க‌ள் டிசம்ப‌ரில் வெளியாக உள்ளதாலும் ஆடுகளத்தின் வெளியீட்டை பொங்கலுக்கு தள்ளி வைத்ததாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்