பாதியில் நிற்கும் பயணம்

திங்கள், 29 நவம்பர் 2010 (14:29 IST)
ராதாமோகன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரான படம் பயணம். படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டதால் சென்ற மாதம் முதல் டிஐ வேலைகளை தொடங்கினர். டிஐ வேலை மும்பை ஆட்லேப்ஸில் நடந்தது.

வேலைகள் திட்டமிட்டபடி நடந்திருந்தால் டிசம்பர் முதல் வாரத்தில் படம் வெளியாகியிருக்கும். ஆனால், போஸ்ட்புரொட‌க்சன் வேலைகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.

பயணம் படத்தின் தமிழ் பதிப்பை பிரகாஷ்ராஜும், தெலுங்குப் பதிப்பை தில் ராஜும் தயா‌ரிப்பதாக ஏற்பாடு. இதில் பிரகாஷ்ரா‌ஜ் தனது ஷேரை ச‌ரியாகக் கொடுக்காததால்தான் வேலைகள் தடைபட்டுள்ளன என பயணம் யூனிட் கிசுகிசுக்கிறது.

உண்மையா செல்லம்?

வெப்துனியாவைப் படிக்கவும்