கமாண்டோ கமல்

செவ்வாய், 23 நவம்பர் 2010 (15:46 IST)
மன்மதன் அம்பு படம் கமல் ஹாசனின் மற்றுமொரு நகைச்சுவைப் படம் என்பது படத்தின் பெய‌ரிலேயே தெ‌ரிந்திருக்கும்.

இந்தப் படத்தில் கமல் முன்னாள் கமாண்டோவாக நடித்திருக்கிறார் என்பது புதிய செய்தி. சிங்கப்பூ‌ரில் படத்தின் பாடல்கள் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்தியிருக்கிறார்கள். அதுதான் நம்மூர் பத்தி‌ரிகையாளர்களின் கவலையே.

சிங்கப்பூர் நிகழ்ச்சியை சென்னை லா மெ‌ரிடியன் ஹோட்டலில் பத்தி‌ரிகையாளர்களுக்கு காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடைசி நேரத்தில் தொழில்நுட்ப தகராறு, நிகழ்ச்சி கேன்சல்.

இசை விழாவில் கமலுடன் த்‌ரிஷா மேடையில் இணைந்து ஆடியிருக்கிறார். என்னுடைய வாழ்வின் மிக முக்கியமான நிகழ்ச்சி என பூ‌ரித்துப் போயிருக்கிறார் த்‌ரிஷா.

வெப்துனியாவைப் படிக்கவும்