லைலா பல படங்களில் நடித்திருந்தாலும் அவரை தமிழ் ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு போய் சேர்த்தவை பாலாவின் நந்தாவும், பிதாமகனும்தான்.
திருமணமான பிறகு லைலா எந்த வாய்ப்பையும் ஒத்துக் கொள்ளவில்லை. இப்போது அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய்.
இந்நிலையில் அவர் பாலாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது அவன் இவன் படத்தில் நடிப்பதாக செய்தி. இது உண்மையா என்பது பற்றி இரு தரப்புமே இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.
அவன் இவனில் ஒரு காட்சியில் சூர்யா தோன்றுவதை மட்டும் உறுதி செய்திருக்கிறார்கள்.