கரு.பழனியப்பனின் மந்திரப் புன்னகை வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்தப் படத்தில் பழனியப்பனே ஹீரோவாக நடித்துள்ளார்.
எந்த ஒரு விஷயத்தையும் நெருங்கிப் பார்த்தால் சில ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் நமக்குக் கிடைக்கும் என்பதை மையப்படுத்தி மந்திரப் புன்னகையை கரு.பழனியப்பன் எடுத்துள்ளார்.
இது காதல் படம்தான் ஆனால் இதில் வரும் காதலுக்கு முடிவேயில்லை என்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஆட்டோ மீட்டர் போல் எகிற வைத்துள்ளார் இவர்.
மீனாட்சி ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.