மணிரத்னம் அமிதாப் உரசல்

சனி, 26 ஜூன் 2010 (13:36 IST)
ராவணன் திரைக்கு வந்து சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அதன் வசூல் இந்தியாவிலும் சரி வெளிநாடுகளிலும் சரி அத்தனை திருப்திகரமாக இல்லை என்ற பேச்சு எழுந்துள்ளது.

இதற்கு நடுவில் அமிதாப் தனது வலைப்பூவிலராவணன் படம் குறித்தும், அபிஷேக் பச்சனின் காட்சிகள் சரிவர எடிட் செய்யப்படாதது குறித்தும் காரமாக விமர்சித்துள்ளார்.

மணி அதற்குப் பதிலடியாக அமிதாப்பிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக நான் சினிமாவுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். அடுத்து இதற்கு பதிலாக அமிதாப் பெருசு ஏதாவது சொல்லாமல் இருக்கவேண்டும். இல்லாவிட்டால், மணியும் அமிதாப்பும் ராம ராவணர்களாகி சொல்லம்புகளைப் பொழிந்து கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்