விஜய் ஆண்டனியின் பணியாரக் கொண்டைக்கா‌ரி

சனி, 22 ஆகஸ்ட் 2009 (13:53 IST)
படத்துக்குப் படம் வித்தியாசமான வார்த்தைகளைப் போட்டு பாடலை ஹிட்டாக்குவதில் விஜய் ஆண்டனிக்கு நிகர் விஜய் ஆண்டனிதான்.

வேட்டைக்காரன் படத்தில் நாக்க முக்க மாதி‌ி ஒரு வார்த்தையை பிடித்துப் போட்டிருக்கிறாராம். விஜய்க்கும் பிடித்துப் போயிருக்கிறது அந்த மந்திரச் சொல்.

ஆகர்ஷினி தியேட்டர்ஸ் தயா‌ரித்து வரும் கனகவேல் காக்க படத்துக்கும் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். கவின்பாலா எழுதி இயக்கும் இந்தப் படத்தில் கரண் ஹீரோ. ஹீரோயின் பெங்களூருவைச் சேர்ந்த ஹ‌ரிப்‌ரியா.

இந்தப் படத்தில் புளோராவுடன் ஒரு குத்துப் பாடலுக்கு ஆடியிருக்கிறார் கரண். வழக்கம்போல ஆண்டனியின் இசையில் பிய்த்துக் கொண்டு போகிறது வார்த்தைகளும் குரலும். சாம்‌பிளுக்கு சில வ‌ரிகள்...

பணியாரக் கொண்டைக்கா‌ி
பலாச் சொள ஒதட்டுக்கா‌ி...

மானாட மயிலாட டீமுக்கு இன்னொரு குத்துப் பாடல் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்