மார்ச் 9 முதல் வேட்டைக்காரன் படப்பிடிப்பு

புதன், 4 மார்ச் 2009 (18:40 IST)
வில்லுக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் வேட்டைக்காரன். இந்த வேட்டைக்காரனுக்கும் எம்.‌ஜி.ஆ‌ரின் வேட்டைக்காரனுக்கும் கதை ‌ரீதியாக எந்த ஒற்றுமையும் இல்லை.

தரணியிடம் பல படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றிய பாபு சிவன் வேட்டைக்காரனை இயக்குகிறார். தயா‌ரிப்பு ஏவி.எம். இரண்டு படத்தில் நடித்த அனுஷ்கா படத்தின் ஹீரோயின்.

விஜய் படங்களில் தவறாமல் இடம்பெறும் வடிவேலு இந்தப் படத்திலும் உண்டு. வரும் 9ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளது ஏவி.எம்.

முதல் முறையாக விஜய் ஆண்டனி விஜய் படத்துக்கு இசையமைக்கிறார். பாடல் கம்போஸிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. படத்தின் அனைத்துப் பாடல்களையும் நாக்க முக்க அளவுக்கு ஹிட் செய்வது என்ற முடிவுடன் வேலை செய்து வருகிறார் விஜய் ஆண்டனி.

பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்