ஹாட்ரிக் அடித்திருக்கிறார் இயக்குனர் சுராஜ். தலைநகரம், மருதமலை, படிக்காதவன்... மூன்றுமே வெற்றிப் படங்கள்.
ஓடுகிற குதிரையில் பணம் கட்டும் கோலிவுட்டில் சுராஜுக்கு ஏக டிமாண்ட். அடுத்து யார் படத்தை சுராஜ் இயக்குவார் என்பது இன்றுவரை பதில் தெரியாத கேள்வி.
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தை சுராஜ் இயக்குகிறார் என்று முதலில் கூறப்பட்டது. தெலுங்கு விக்கிரமார்குடு படத்தின் ரீமேக் இது என்றும் செய்திகள் வந்தன. இன்று நிலைமை வேறு. இரு தரப்புமே படம் பற்றி மௌனம் சாதிக்கிறது.
இந்நிலையில் அஜித்தை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார், சுராஜ். கதை அஜித்துக்குப் பிடித்திருப்பதாகவும், சுராஜ் இயக்கத்தில் நடிக்க அஜித் ஆர்வமாக இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சரணின் அசல் படத்துக்குப் பிறகு அஜித், சுராஜ் இணையும் படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.