பிரபல நடிகைகளை இனி தனது படத்தில் ஒப்பந்தம் செய்யப் போவதில்லை என்ற பேரரசின் கொள்கையில் மாற்றமில்லை. இவரது அடுத்தப் படமான திருத்தணியில் மாடல் ஒருவர் ஹீரோயினாக நடிக்கிறார்.
பழனி படத்தை இயக்கியபோது பேரரசின் முந்தைய படங்களில் நடித்த பிரபல நடிகைகள் யாரும் கால்ஷீட் தர முன்வரவில்லை. அன்று அவர் எடுத்த சபதம்தான், 'பிரபல நடிகைகளை என்னுடைய படங்களில் நடிக்க வைப்பதில்லை’.
பழனி, திருவண்ணாமலையை தொடர்ந்து திருத்தணியில் நடிப்பவரும் தமிழ் திரையுலகில் பிரபலமாகாதவர். பெயர் சுஹாசி. தெலுங்கு, கன்னடத்தில் தலா ஒரு படம் நடித்திருக்கிறார். தமிழில் திருத்தணி முதல் படம்.
ஸ்டார் பிளஸ்சில் வெளிவந்த சீரியலில் நடித்திருக்கிறார் சுஹாசி. அந்த வகையில் வட இந்தியாவில் இவர் பிரபலம். மாடலிங்கும் செய்துள்ளார். விளம்பரப் படங்களிலும் இவரைப் பார்க்கலாம்.
திருத்தணியை தனது சொந்த பட நிறுவனம் மேஜிக் மைண்ட் சார்பில் தயாரித்து இயக்குகிறார் பேரரசு. இசையும் இவரே. பரத் ஹீரோவாக நடிக்கிறார்.