கமல் - சோதனை மேல் சோதனை

புதன், 21 ஜனவரி 2009 (17:27 IST)
விலகிப் போனாலும் வேண்டாத விருந்தாளியாக கமலை பின்னாலேயே துரத்துகின்றன பிரச்சனைகள். உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு முதலில் பலியானது இவரது மர்மயோகி படம். அடுத்து அறிவித்த தலைவன் இருக்கின்றானை தொடங்குவதிலும் சிக்கல்.

இந்திப் படம் தி வெனெஸ்டேயை தமிழ், மலையாளத்தில் ‌‌ரீமேக் செய்யலாம் என்றால் அதற்கும் ஒரு ஆந்திரா வில்லன் முளைத்திருக்கிறார்.

மினிமம் பட்ஜெட், மேக்சிமம் கியாரண்டி. நீர‌ஜ் பாண்டேயின் தி வெனெஸ்டே மீது ஆளாளுக்கு காதல்கொள்ள இதுவே காரணம். தி வெனெஸ்டேயின் தமிழ் மற்றும் தெலுங்கு ‌‌ரீமேக் உ‌ரிமைக்காக யு டிவிக்கு அடவான்ஸ் கொடுத்திருக்கிறார் தெலுங்குப்பட தயா‌ரிப்பாளர் கிரண் கொனேரு. அதேநேரம் கமலும் ‌‌ரீமேக் உ‌ரிமை கேட்டிருக்கிறார். கமலா? கொனேருவா?

யு டிவியின் தட்டு கமல் பக்கமாக சாய, கோர்ட்டுக்கு போயிருக்கிறார் கொனேரு. தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும் என்று சில நாட்களில் தெ‌ரிந்துவிடும். யு டிவியிடம் கேட்டால் தி வெனெஸ்டேயின் ‌‌ரீமேக் உ‌ரிமையை இதுவரை யாருக்கும் அளிக்கவில்லை என்கிறார்கள் சுருதி மாற்றாமல்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது இதுதானா?

வெப்துனியாவைப் படிக்கவும்