தமிழில் நான் கடவுள் வெளியாகும் அதே நாள் தெலுங்கிலும் படத்தை வெளியிட வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன.
பாலாவின் பிதாமகன் படம் சிவ புத்திருடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பாலாவின் நான் கடவுள் படத்தை ஆந்திர ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக நான் கடவுள் தமிழில் வெளியாகும் அதே நாள் தெலுங்கிலும் வெளியிட வேலைகள் நடந்து வருகின்றன.
நான் கடவுளுக்கு தெலுங்கில் நேனு தேவுடு என பெயர் வைத்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புவதால், ஆர்யா, பூஜா நடித்த ஓரம்போ படத்தின் தெலுங்கு பதிப்பான ஹலோ ஆட்டோவை இன்னும் வெளியிடாமல் நான் கடவுள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர்.