பொங்கலுக்கு வெளியாகியிருக்க வேண்டிய படம் பிரபு சாலமனின், லாடம். திரையரங்குகள் கிடைக்காததால் அடுத்த மாதம் 6ம் தேதி திரைக்கு வருகிறது.
கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலைக்காக வரும் ஹீரோ அரவிந்த், தேவையில்லாத பேச்சால் பிரச்சனை ஒன்றில் மாட்டிக் கொள்கிறார். அம்மாஞ்சி தோற்றத்தில் இருக்கும் அவர் தனது அறிவைப் பயன்படுத்தி அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வருவது லாடத்தின் கதை.
சார்மி அரவிந்தை காப்பாற்றி அடைக்கலம் தரும் வேடத்தில் நடித்துள்ளார். மொத்தம் பதினாறு நாட்களில் நடக்கும் கதை இது என்பது படத்தின் சுவாரஸியமான அம்சம்.
லாடத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிடுகிறார்கள். சார்மி இருப்பதால் படத்துக்கு ஆந்திராவில் ஸ்டார் வேல்யூ..