2009ம் ஆண்டின் எதிர்பார்ப்புக்குரிய படங்களின் பட்டியலில் மிஷ்கினின் நந்தலாலாவும் இடம்பிடித்துள்ளது.
மிஷ்கின் முதல் முறையாக கேமராவுக்குமுன் தோன்றும் இந்தப் படம் குறித்து வரும் செய்திகள் ஒவ்வொன்றும் ஆச்சரியமானவை. குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்களுக்கு தனி கௌரம் அளிக்கும் விதமாக தயாராகி வருகிறது நந்தலாலா.
நரிக்குறவர்களை வைத்து பல காட்சிகளை இயக்கிய மிஷ்கின், சரோஜா அம்மாள் என்ற நரிக்குறவ பெண்மணியை இளையராஜா இசையில் பாட வைத்துள்ளார். அதேபோல் லக்சா என்ற திருநங்கையையும் நடிக்க வைத்துள்ளார்.
திருநங்கைகளை வழக்கமான தமிழ் சினிமா சித்தரிப்து போலன்றி, உணர்வுப்பூர்வமாக காட்டியிருக்கிறாராம் மிஷ்கின்.
விளிம்பு நிலை மனிதர்கள் மீதான இந்த கரிசனத்துக்காகவே ஓடவேண்டும், நந்தலாலா.