உதவி இயக்குனராக மாறிய இயக்குனர்

வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:51 IST)
படம் இயக்கிய பலர் புதிய வாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் உதவி இயக்குனர்களாக பணிபு‌ரியும் சம்பவங்கள் தமிழ் சினிமாவில் சகஜம். ஆனால், நான்கு படங்களை இயக்கிய ஒருவர் மீண்டும் உதவி இயக்குனராகியிருப்பது இதுவே முதல் முறை.

ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், மெர்க்கு‌ி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ். ஸ்டேன்லி புதிய படங்கள் கிடைக்காமல் சசியிடம் பூ படத்தில் உதவி இயக்குனராக பணிபு‌ரிந்தது பலருக்கும் தெ‌ரியாத விஷயம்.

இவர் மணிரத்னம் இயக்கும் படத்திலும் உதவி இயக்குனராக பணிபு‌ரிய உள்ளார். மணிரத்னம் தற்போது இயக்கிவரும் ராவணன் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் கேரளாவில் நடக்க இருக்கிறது. இதில் எஸ்.எஸ். ஸ்டேன்லியும் கலந்து கொள்கிறார். கேரளா ஷெட்யூ‌லின் முழுப் பொறுப்பையும் மணிரத்னம் இவ‌ரிடம் ஒப்படைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்