வரும் பன்னிரெண்டாம் தேதி மக்கள் தொலைக்காட்சி, மக்கள் விருதுகள் 2008 என்ற பெயரில் 31 பிரிவுகளில் விருதுகள் வழங்க உள்ளது. இதில் சிறந்த திரைப்படம், குறும் படம், ஆவணப் படம் ஆகிய மூன்று பிரிவுகளும் அடக்கம்.
2008-ன் சிறந்த திரைப்படமாக மக்கள் விருதுக்கு சசியின் பூ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த குறும் படமாக விழி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆவணப் படத்துக்கான விருதுக்கு சோமிதரனின் எரியும் நினைவுகள் தேர்வாகியுள்ளது.
12ம் தேதி மாலை ஆறு மணிக்கு ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஷ்ரமம் பள்ளி வளாகத்தில் நடைபெறும் விழாவில் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மக்கள் விருதுகளை வழங்குகிறார். மருத்துவர் ராமதாஸ் சிறப்புரையாற்றுகிறார்.