கௌதமின் சுறா

செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:21 IST)
அழகு தமிழில் படத்திற்கு பெயர் வைக்கும் கௌதமின் அடுத்தப் படத்தின் பெயர் சுறா. சுறஎன்றால் கடலில் இருக்கும் ஷார்க்கா? அழகான ஒரு விளக்கம் விரைவில் கிடைக்கும்.

சுறாவில் ஹீரோவாக நடிப்பது ஆந்திராவின் ஆணழகன், அல்லு அர்ஜுன். அல்லுவின் முகம் தமிழில் எடுபடுமா? கண்டிப்பாக என்கிறார்கள் விஷயம் தெ‌ரிந்தவர்கள்.

அல்லு அர்ஜுனின் சிக்ஸ் பேக் உடம்புக்காகவே அவர் தெலுங்கில் நடித்தப் படங்களை வ‌ரிசையாக மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். அதனால் தமிழ் ரசிகர்களும் அவரை ரசிப்பார்கள் என்பது, சிலரது கணக்கு. தவிர படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தை‌ரியமாக வெளியிடலாம்.

சென்னையில் ஒரு மழைக்காலத்தை‌த் தொடர்ந்து சுறாவுக்கும் ஏ.ஆர். ரஹ்மானை அணுகியிருக்கிறார் கௌதம். ஹாரிஸை பி‌ரிந்த பிறகு அவருக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் இசைப் புயல் மட்டுமே.

சுறகுறித்த இன்னொரு சின்ன செய்தி. வாரணம் ஆயிரம் படத்தில் நடித்த திவ்யா சுறாவிலும் சின்ன வேடம் ஒன்றில் நடிக்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்