ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை கதாநாயகனாக உயர்த்தியிருக்கும் படம் சற்றுமுன் கிடைத்த தகவல். த்ரில்லர் கதையான இதில் அம்முவாகிய நான் பாரதி மற்றும் கௌசல்யா நடித்துள்ளனர்.
ஏர் மீடியா சார்பில் ஹரிபாஸ்கர் தயாரித்திருக்கும் இப்படத்தை முதலில் இயக்கியது தக்காளி சீனிவாசன். படத்தின் பாதிக்கு மேற்பட்ட காட்சிகள் படமான நிலையில் தக்காளி சீனிவாசனை நீக்கிவிட்டு புவன கண்ணனை வைத்து படத்தை முடித்துள்ளனர். இந்த மாற்றத்தை எதிர்த்து சீனிவாசன் புகார் தெரிவிக்காததால் மாற்றத்துக்கான காரணம் மர்மமாகவே உள்ளது.
அம்முவாகிய நான் வெளிவந்த உடன் பாரதி நடிக்க ஒப்புக்கொண்ட இப்படம் இப்போதுதான் திரைக்குவர தயாராகியுள்ளது. ஜனவரி 23ம் தேதி படத்தை வெளியிட தீர்மானித்துள்ளனர்.