ஆனந்த் புகழ்பாடும் 'அயன்' நாயகன்
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:00 IST)
'வாரணம் ஆயிரம்' எதிர்பார்த்த வெற்றி இல்லை என்பதால் நடிகர் சூர்யா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'அயன்' படத்தை மிகும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார் 'அயன்' படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த். ஏற்கெனவே ஸ்ரீகாந்த்தை வைத்து 'கனா கண்டேன்' படத்தை இயக்கியதோடு ப்ரிதிவிராஜைத் தமிழிற்கு அறிமுகம் செய்தவர்.
எழுத்தாளர் சுபா கதை, வசனத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் இப்படத்தில் தன்னை மிகவும் இளமையாகவும், அழகாகவும் காட்டியிருக்கிறார் என்று இயக்குநரைப் புகழ்வதோடு, 'அயன்' என்று அழகான ஆண்களை, பெண்கள் சொல்லி அழைக்கும்படி செய்திருக்கிறார் என்று கூறி வருகிறார் சூர்யா.
கிட்டத்தட்ட படம் முடியும் தருவாயில் உள்ளது. ஏற்கெனவே கே.வி. ஆனந்த் 'கனா கண்டேன்' படத்திற்காக அழைத்தார். நடிக்க முடியவில்லை, அதனால் இந்த 'அயன்' படத்தை விடாமல் நடிக்க ஒப்புக்கொண்டது எனக்கு எவ்வளவு பெரிய 'ப்ளஸ்' என்று படம் வந்தால் தெரிந்து கொள்வீர்கள் என்று மிகுந்த நம்பிக்கையுடன் பேசுகிறார் சூர்யா.
இப்படத்திற்காக வில்லனாக நடிக்கும் இந்தி நடிகர் ஆகாஷ்தீப் சைகலுடன் சூர்யா ஆப்பிரிக்காவில் 600 அடி பள்ளத்தாக்கின் நுனியில் நின்று மோதும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.