காதலில் விழுந்தேன் படத்தில் நாயகன் நாயகியாக நடித்த நகுலன்-சுனேனா மீண்டும் இணைந்து மாசிலாமணி என்ற படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இயக்குனர் ஆர்.என்.ஆர். மனோகரன் சில படங்களில் சின்னச் சின்ன கேரக்டரிகளில் நடிக்கவும் செய்துள்ளார்.
இப்படத்தின் நாயகிக்கு கதைப்படி நடனம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் பல்வேறு நடிகைகளைத் தேடிப் பிடிக்க, யாரும் நடனத்தில் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை.
பின் யாரோ சுனேனாவுக்கு நன்றாக நடனம் ஆடத்தெரியும் என்ற விஷயத்தைச் சொல்ல... உடனே கூப்பிட்டுப் பேசி நகுலனுக்கு ஜோடியாக்கிவிட்டார்.
சுனேனா முறைப்படி நடனம் கற்றாலும் சின்ன வயதில் ஆடியது தற்போது டச் விட்டுப்போக, மீண்டும் டான்ஸ் கிளாஸுக்கு சென்று பயிற்சி எடுத்து வருகிறார்.
'மாசிலாமணி' மட்டுமல்லாமல், 'கதிர்வேல்', 'யாதுமாகி', 'மதன்' போன்ற படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்தோடு முதல் படமான காதலில் விழுந்தேன் நன்றாக ஓட, அடுத்தடுத்த படங்களும் நன்றாக ஓடவேண்டும் என்று இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டிருக்கிறார்.