இயக்குனர் சங்க அதிரடி மாற்றங்கள்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:28 IST)
இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல் நடந்து பாரதிராஜா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பல்வேறு அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்.

இயக்குனர்கள் அனைவரும் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். அதேபோல உதவி இயக்குனர்களும் சங்க உறுப்பினர்களாக கார்டு எடுத்தால்தான் படங்களில் வேலை பார்க்க முடியும். அப்படி கார்டு இல்லாமல் வேலை செய்பவர்களை கண்காணிப்பு குழுவினர் ¥ட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவர்களை வெளியேற்றுவார்கள்.

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு இயக்குனரும், படம் இயக்குவதற்கு முன்பே இணை மற்றும் உதவி இயக்குனர்களுக்கான சம்பளப் பட்டியலை சங்கத்தில் கொடுத்துவிட வேண்டும். அதற்கு குறைவாகக் கொடுத்தால் சங்கமே பொறுப்பேற்று குறிப்பிட்ட தொகையை பெற்றுத்தரும்.

மேலும், பாரதிராஜா அணியில் வி. சேகரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெற்றி பெற்றார்கள். அவர் ஜெயித்து பொறுப்புக்கு வரக்கூடாது என்று பல இயக்குனர்கள் ஓட்டுப்போடாமல் விட்டிருந்தும், தோற்ற வி. சேகரை சிறப்பு கெளரவக் கண்காணிப்பாளராக மீண்டும் சேர்த்துக் கொண்டது இயக்குனர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்