நடிகர்கள் தங்களுக்குள் முறைத்துக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் மாமன் மச்சான்தான். இளம் நடிகர்களில் ஈகோ பார்ப்பவர்கள் யாருமில்லை. அதிலும் சிம்பு ஸ்பெஷல்.
தன்னுடைய சிலம்பாட்டம் படத்தை பார்க்க அஜித்தை அழைத்தவர் அப்படியே விஜயையும் அழைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். சிலம்பாட்டத்தில் அஜித்தை புகழ்வதுபோல் காட்சிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஃபோர் பிரேம் திரையரங்கில் படத்தைப் பார்த்த விஜய் சிம்புவை வெகுவாக பாராட்டினார். தலயை தொடர்ந்து தளபதியும் பாராட்டியதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சிம்பு.