அல்ஷோலா புரொடக்சன் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ஆறுமனமே. காதல்தான் படத்தின் களம்.
துபாயை சேர்ந்த தீபக் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே இவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. சும்மாவா... மூன்று ஹீரோயின்களுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்.
சும்மா இருக்கும் ஒருவன் காதலினால் எப்படி நல்லவனாக மாறுகிறான் என்பதுதான் ஆறுமனமே படத்தின் கதை. அவன் செய்யும் சாதாரண விஷயமும் மிகப் பெரிய விஷயமாக பேசப்படுகிறது. இந்த கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கி வருபவர் சுதீஷ் சங்கர்.
ஹிரோயின்களாக அடடா என்ன அழகு நிக்கோல், கார்த்திகா, மைதிலி ஆகியோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.