சிறுத்தையை இயக்குகிறார் வி.வி. கதிர்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:01 IST)
பருத்திவீரனை தயா‌ரித்த ஸ்டுடியோ கி‌ரின் ஞானவேல் அடுத்து சிங்கம், சிறுத்தை என இரு படங்களை தயா‌ரிக்கிறார். சிங்கத்தில் சூர்யாவும், சிறுத்தையில் கார்த்தியும் நடிக்கின்றனர். சூர்யா படத்தை ஹ‌ி இயக்குகிறார்.

கார்த்தி நடிக்கும் சிறுத்தை, தெலுங்கில் வெளியான விக்ரமார் குடு படத்தின் தமிழ் ‌‌ரீ-மேக். இந்தப் படத்தை சுரா‌ஜ் இயக்குவார் என்று கூறப்பட்டது. தனுஷ் நடிப்பில் படிக்காதவன் படத்தை இயக்கிவரும் சுரா‌ஜ் அடுத்து வேறு படத்தை இயக்க இரு‌ப்பதா‌ல் அவருக்குப் பதில் தெனாவட்டு இயக்குனர் வி.வி. கதிரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதில் கார்த்தி ஜோடியாக ரெண்டு படத்தில் நடித்த அனுஷ்கா நடிக்கிறார். விக்ரமார் குடு படத்திலும் இவர்தான் ஹீரோயினாக நடித்திருந்தா‌‌ர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்