நந்தலாலாவில் சிம்பொனி

செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:28 IST)
நந்தலாலாவில் யார் ஹீரோ என்ற கேள்விக்கு மிஷ்கின் அளித்த பதில், இளையராஜா. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

மிஷ்கினின் முதல் இரண்டு படங்களும் ஆக்­ஷன் படங்கள். முதல் முறையாக உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கும் படம், நந்தலாலா. தாயை தேடிச் செல்லும் இருவரின் கதையை இதில் சொல்ல உள்ளார் மிஷ்கின்.

இவர் முதல் முறையாக நடிக்கும் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. மிஷ்கினின் அம்மாவாக ரோகினி நடிக்கிறார். படத்தின் நாயகி, கத்தாள கண்ணாலே பாடலுக்கு ஆடிய ஸ்னிக்தா.

படத்தில் வசனம் இல்லாமல் இசையாலே கதை சொல்லும் பகுதிகள் நிறைய உள்ளன. குறிப்பாக அரை மணி நேரம் வரும் ஒரு காட்சியில் வசனங்களே இல்லையாம். தனது மந்திர இசையால் இந்த காட்சியை நிறைத்திருக்கிறாராம், இளையராஜா.

மேலும் படத்தில் சிம்பொனி இசை இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் ஹங்கேரி இசைக் கலைஞர்கள் நால்வரை வரவழைக்க உள்ளனர்.

நந்தலாலாவின் பா‌க்கி போர்ஷ­ன் முடிந்து போஸ்ட்புரொடக்­ன் வேலைகள் நடந்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்