இந்த ஆண்டு அதிகமானவர்கள் பயன்படுத்திய காலர் டயூன், ஜேம்ஸ் வசந்தன் இசையில் உருவான கண்கள் இரண்டால் பாடல் என்று அறிவித்திருக்கிறார்கள்.
சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் பிரபலமாகியுள்ளது. மலையாளப் படங்களின் பாடல்களைவிட இந்தப் பாடலே அதிகம் ரசிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார், ஜேம்ஸ் வசந்தன். அப்படி அலசி ஆராய்ந்து இவர் தேர்வு செய்திருக்கும் படம் யாதுமாகி. சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம் தயாரிக்கும் இந்தப் படத்தை பாலகுமார் இயக்குகிறார்.
படத்தின் கதையை முழுமையாக கேட்டு, அது பிடித்த பின்பே இசையமைக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன். யுவன் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக நடிப்பது, காதலில் விழுந்தேன் சுனேனா.
கண்கள் இரண்டைபோல் காதுகளை நிறைக்கும் பாடலுக்கு யாதுமாகி கியாரண்டி.