உறுமி மேளத்தை ஓட விட்டது போலிருக்கும் இந்தப் பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தார், விஷால். இடம் காரைக்குடி. உடன் ஆடியவர் மீனாட்சி.
சத்யம் தோல்வியை ஓரமாக ஒதுக்கி வைத்து தோரணையில் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார் விஷால். சபா அய்யப்பன் இயக்கும் தோரணையில் விஷாலுக்கு ஜோடி ஸ்ரேயா. பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீமன், கிஷோர், பாண்டியராஜன் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.
காரைக்குடியில் தொடங்கிய படப்பிடிப்பில் முதல் காட்சியாக படமானது மேலே பார்த்த அதிரடி ஓபனிங் பாடல்;. கலை இயக்குனர் வேலு பிரகாஷ் உருவாக்கிய பிரம்மாண்ட துர்கை சிலையின் முன் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் ஆடினார்கள் விஷாலும், மீனாட்சியும்.
சத்யம் படத்தின் தோல்விக்கு சொல்லப்பட்ட காரணங்களில் விஷான் சிக்ஸ் பேக்கும் ஒன்று. அந்த காரணத்தை பொய்யாக்க தோரணை போட்டோசெஷனில் சட்டை அணியாமல் தனது சிக்ஸ் பேக் தேகம் தெரிய போஸ் கொடுத்தார் விஷால். படத்திலும் சில காட்சிகளில் இதே தோரணையில் தோன்றுகிறாராம்.
சென்டிமெண்ட் பார்க்கும் சினிமாவில் விஷாலின் சிக்ஸ் பேக் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்.