மனசின் அக்கரை மலையாள படத்தில் அறிமுகமானவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கில் பிஸியான பிறகு அவருக்கு மலையாள சினிமா நிஜமாகவே அக்கரை பிரதேசமாகிவிட்டது. இவரது கடைசி மலையாள பிரவேசம், டுவண்டி 20. அங்குள்ள நடிகர் சங்கம் தயாரித்தது.
தமிழில் லிங்குசாமி படத்திலிருந்து விலகிய பிறகு மலையாளத்தை கரிசனத்துடன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார் நயன். சித்திக் மற்றும் பத்மகுமார் இயக்கும் படங்களில் நயன்தாரா நடிப்பார் என்பது மாலிவுட் தகவல்.
திலீப் நடிக்கும் தனது பாடிகாட் படத்தை நாளை பூஜையுடன் தொடங்குகிறார், சித்திக். இதில் திலீப் ஜோடி காவ்யா மாதவன். நயன்தாராவும் இதில் நடிப்பதாக பேச்சு. அதேபோல் பத்மகுமார் இயக்கும் மும்பை ட்ரீம்ஸ் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நயன்தாராவின் இந்த மாற்றத்தால் மகிழ்ந்து கிடக்கிறது மலையாள சினிமா.