கடவுளே இறங்கி வந்து, எப்போ படம் ரிலீஸ் என்று கேட்கும் அளவுக்கு நான் கடவுள் படத்தை இழுத்துக் கொண்டிருக்கிறார், பாலா. படத்தின் ரிலீஸ் தேதி தெரியாத நிலையில் பாடல்களை டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளது தயாரிப்பாளர்கள் தரப்பு.
பிதாமகனைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் இளையராஜாவே இசையமைத்துள்ளார். அதிசயமாக படத்தில் ஒரு பழைய பாடலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் இது ரீ-மிக்ஸ் அல்ல என்பது ஆறுதல்.
டிசம்பரில் பாடல்களை வெளியிட திடடமிட்டுள்ளார்களே தவிர தேதி எதுவும் இன்னும் முடிவாகவில்லை.