சசியின் பூ வரும் 28 ஆம் தேதி வெளியாகிறது. மோசர் பேர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீகாந்தும், பார்வதியும் நடித்துள்ளனர்.
எஸ்.எஸ்.குமரன் இசையில் அனைத்துப் பாடல்களும் ரசிகர்களின் டாப் டென் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. தமிழ்செல்வனின் வெயிலோடு போய் சிறுகதைக்கு திரைவடிவம் கொடுத்துள்ளார் சசி.
வேறொருவரின் கதையை சசி படமாக்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 28 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.