மீண்டும் நாஞ்சில் நாகரா‌ஜ்

தினந்தோறும் படம் மூலம் தமிழ் திரையில் நம்பிக்கைக்கு‌ரிய இயக்குனராக நுழைந்தவர் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த நாகரா‌ஜ். தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர், சென்றதென்னவோ டாஸ்மாக்கிற்கு.

சினிமா குடும்பம் இரண்டையும் மறந்து குடியில் தோய்ந்து போனவர் போதை தெ‌ளிந்து பார்த்தபோது காலம் கடந்து விட்டிருந்தது. யாரும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக இல்லை. ஆனால் மனம் தளராமல் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் தீவிரத்தில் இருக்கிறா‌ர்.

சமீபத்தில் நடிகர் ‌ஜீவனை சந்தித்து கதை சொல்லியிருக்கிறா‌ர், நாகரா‌ஜ். கதை பிடித்துப் போன ‌ஜீவன் காத்திருக்க சொல்லியிருக்கிறார்.

காலம் கனியுமா நாகராஜுக்கு?

வெப்துனியாவைப் படிக்கவும்