கின்னஸில் பாபுகணேஷ்

கின்னஸில் பெயர் வரவேண்டும் என்பதற்காக தனக்குத் தெ‌ரியாத வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்திருக்கிறார் பாபுகணேஷ்.

பல படங்களில் நடித்திருக்கும் இவர், உருப்படியாக இதுவரை ஏதேனும் செய்துள்ளாரா என்றால் இல்லை. மும்தா‌ஜ் கால்ஷீட் தரவில்லை என்பதற்காக காலைக்காட்சி படங்களில் நடித்துக் கொண்டிருந்த பெயர் தெ‌ரியாத நடிகையை கும்தா‌ஜ் என்ற பெய‌ரில் அறிமுகப்படுத்தியது போன்ற கலைச் சேவைகளை செய்தவர் இவர்.

அப்படிப்பட்டவர், திரையில் பாரதிராஜா, மணிரத்னம் போன்றவர்கள் செய்யத் தயங்கிய புரட்சியை செய்திருப்பதாக ஓவர் பில்டப்பில் பேசி வருகிறார். அது என்ன புரட்சி?

தற்கொலை செய்து கொண்ட நடிகைகள் ஏன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள், அதற்கு காரணமானவர்கள் யார் என்பதைப் பற்றி தனது நடிகை படத்தில் அலசி காயப்போட்டுள்ளாராம். மேலும், சினிமா இல்லாமல் எந்த வியாபாரமும் இல்லை என்பதை படத்தில் சொல்லியிருக்கிறாராம்.

இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு உள்பட 14 வேலைகளை செய்து கின்னஸிலும் இடம் பிடித்துள்ளாராம்.

முதலில் மக்கள் மனதில் இடம்பிடிக்க பாபுகணேஷ் முயற்சி செய்வது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்