கோவா திரைப்பட விழா

கோவாவில் 39 வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நவ. 22 ஆம் தேதி தொடங்குகிறது. வருடம்தோறும் கோவாவின் பனா‌ி நக‌ரி‌ல் நடைபெறும் இந்த விழா இந்திய அளவில் முக்கியமான திரைப்பட விழாவாக கருதப்படுகிறது.

விழாவின் தலைமை விருந்தினர்களாக நடிகை ரேகாவும், கமல்ஹாசனும் கலந்து கொள்கிறார்கள். தொடக்கவிழா நிகழ்ச்சிகளை நடிகை அம்‌ரிதா ராவ் தொகுத்து வழங்குகிறார். சிறப்பு விருந்தினராக இலியானா அழை‌க்க‌ப்பட்டுள்ளார். மேலும் தொடக்கவிழா நிகழ்ச்சிகளில் கோவா கவர்னர் எஸ்.எஸ்.சித்து, முதல்வர் திகம்பர் காமத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

டிசம்பர் 2 ஆம் தேதி ரை நடைபெறும் இந்த விழாவில் தமிழிலிருந்து பில்லா, முதல் முதல் முதல்வரை, கல்லூ‌ரி ஆகிய படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன. நவ. 25 ஆம் தேதி பில்லாவும், 26 ஆம் தேதி முதல் முதல் முதல்வரையும், 30 ஆம் தேதி கல்லூ‌ரியும் திரையிடப்படுகிறது. விருதுக்கான போட்டி பி‌ரிவில் ப்‌ரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ரா‌நடித்திருக்கும் காஞ்சீவரம் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்