நான் கடவுள் படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ தொலைக்காட்சி பாலாவை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில் பாலாவின் அந்தப் படத்தில் நடிக்க 'பருத்திவீரன்' கார்த்தி கால்ஷீட் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே கார்த்தி நடித்த பருத்தி வீரன் படமே 300 நாட்கள் எடுக்கப்பட்டது. தற்பொழுது அவர் நடித்துவரும் ஆயிரத்தில் ஒருவன் படம் இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது.
மேலும், வரும் டிசம்பர் மாதம் முதல் லிங்குசாமியின் படத்தில் நடிக்க கார்த்தி திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், நீண்ட நாட்களாக நான் கடவுள் எடுத்துவரும் பாலாவிற்கு, கார்த்தி எப்படி கால்ஷீட் கொடுத்தார் என்பதே கோடம்பாக்கத்தில் பேச்சாக உள்ளது.