ஷக்தி, சந்தியா, சரண்யா மோகன் நடித்திருக்கும் மகேஷ் சரண்யா மற்றும் பலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்ற நடந்தது. படத்தின் இயக்குனர் ரவி, லிங்குசாமியின் அசிஸ்டெண்ட். சிஷ்யனை வாழ்த்த விழாவுக்கு வந்தார் லிங்குசாமி.
படத்தை நான் பார்த்தேன். பூவே உனக்காக படம் விஜய்க்கு எப்படி திருப்புமுனையாக அமைந்ததோ அதேபோல், மகேஷ் சரண்யா மற்றும் பலர் ஷக்திக்கு அமையும் என்று வாழ்த்தினார்.
தனது முதல் படத்தின் கதையை ரவியிடம் கூறியபோது, ரவி ஒரு கரெக்சன் சொன்னதாகவும், அதை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறிய லிங்குசாமி, "எடிட்டிங்கில் ரவி சொன்னதுபோல்தான் வைக்க வேண்டி வந்தது" என்றார்.
இதே கருத்தை தெரிவித்த இயக்குனரும், ஷக்தியின் தந்தையுமான பி. வாசு, படம் பார்க்கும்போது கதையில் நான் சொன்ன திருத்தம் எதுவும் இல்லை. ரவி என்ன சொன்னாரோ அதையே எடுத்திருக்கிறார் என்றார்.
விழாவில் சர்ப்ரைஸ், பிடிச்சிருக்கு படத்தின் ஹீரோ அசோக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது. பிடிச்சிருக்கு படத்தை தயாரித்த சித. செண்பகுமார்தான் மகேஷ், சரண்யா மற்றும் பலர் படத்தையும் தயாரித்துள்ளார். அதனால் தான் ஹீரோ அறிவிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
கோடம்பாக்கத்தில் நன்றியின் சுனை இன்னும் வற்றவிடவில்லை.