தசாவதாரம் வெளியான சூட்டோடு தனது அடுத்த படம் மர்மயோகி என அறிவித்ததோடு தன்னுடன் இணைந்து படத்தை தயாரிக்க சில பெரிய கம்பெனிகளையும் அணுகினார். ஒரு சில கம்பெனிகள் தயாரிக்க முன்வந்த காரணத்தால் மற்ற வேலைகளை கவனித்தவர் கமல்.
முதலில் ஸ்ரேயா நடிப்பார் என்று சொல்லி வந்தார். பின் அவரை நீக்கிவிட்டு மிருகம் படத்தில் நடித்த பத்மப்ரியாதான் எனக்கு பொறுத்தமாக இருப்பார் என்றார். பின் அவரையும் மாற்றிவிட்டு த்ரிஷா என்றார்.
த்ரிஷாவும் ஒத்துக்கொண்டு நடிக்க சம்மதித்த வேளையில் கமலுடன் மர்மயோகியை தயாரிக்க முன்வந்த நிறுவனம் மர்மமான முறையில் விலகிக்கொண்டது. இதனால் கடுப்பான கமல் மர்மயோகி படம் தற்போது இல்லை என்று கூறிவிட்டார்.
இந்த விஷயம் எதுவும் தெரியாத கல்லூரி நாயகி தமன்னா. மர்மயோகி படத்தில் கமல் ஜோடியாக என்னை கூப்பிட்டால் நடித்துக் கொடுப்பேன். அவருடன் ஜோடியாக நடிப்பது என் நீண்ட நாளைய கனவு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
2009 வரை நான் ரொம்ப பிஸி என்று அணுகும் தயாரிப்பாளர்களிடம் சொல்லி அனுப்பும் தமன்னா, கமல் படத்துக்கு மட்டும் எப்படி கால்ஷீட் கொடுப்பார்? என கடுகடுக்கின்றனர்.