சத்யம் படத்துக்குப் பின்னால் ஒரு படத்தை இயக்குவதாகவும், தானே ஹீரோ, தயாரிப்பாளராகவும் இருக்கப் போகிறோன் என்றார் விஷால்.
சத்யம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. பெரிய பட்ஜெட் படம் வேறு. சில கோடிகள் நஷ்டம். அப்படம் கொடுத்த அதிர்ச்சியால் இயக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு போட்ட பணத்தை எடுக்கும் விதமாக நல்ல கதை, நல்ல இயக்குனரை தேடிக் கொண்டிருந்தார் விஷால்.
பின், செல்வராகவனை அணுகி தனக்காக ஒரு படம் பண்ண வேண்டும் என கேட்டுக்கொள்ள, ஒரு நல்ல கதையை தயார் செய்துகொண்டு விஷால் மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் கதை சொல்ல, கேட்ட அனைவருக்கும் கதை பிடித்துப் போக, விரைவில் தொடங்கவும் சம்மதம் தெரிவித்தார்கள்.
ஆனால், திமிரு படம் பண்ணிய தருண்கோபியும், சத்யம் பண்ணிய ராஜசேகரும் விஷாலின் தலையீட்டால் நொந்துபோனதை அறிந்த செல்வராகவன், முதலில் பணம் போடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். கதையில் தலையிடுவது என்றால் படம் பண்ணமாட்டேன் என்று கண்டிப்புடன் சொல்ல, யோசித்து சொல்கிறோம் என்று அனுப்பிவிட்டார்களாம் விஷால் குடும்பத்தினர்.